பணிஸில் சட்டை ஊசி - ஒரு இலட்சம் ரூபாய் நட்டயீடு வழங்க உத்தரவு

சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்த பெண்ணிற்கு நட்டயீடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்குமாறு கொழும்பிலுள்ள தனியார் பிரபல உணவக உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷசீ மகேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த பெண் மருதானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்துள்ளார்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் , அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் குறித்த பெண்ணை தகாத வார்த்தைகளால் தூற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்தே குறித்த பெண் அந்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
பணிஸில் சட்டை ஊசி - ஒரு இலட்சம் ரூபாய் நட்டயீடு வழங்க உத்தரவு பணிஸில் சட்டை ஊசி - ஒரு இலட்சம் ரூபாய் நட்டயீடு வழங்க உத்தரவு Reviewed by Vanni Express News on 1/31/2019 11:51:00 PM Rating: 5