ஜனாதிபதியுடன் 10 பேர் அவசரமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளார். 

ஜனாதிபதியுடன் மேலும் 10 பேர் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

சிங்கப்பூரில் இடம்பெறுகின்ற ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். 

இன்று காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் கூறினார். 

ஜனாதிபதியின் இந்த விஜயம் எதிர்வரும் 25ம் திகதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் 10 பேர் அவசரமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்கள் ஜனாதிபதியுடன் 10 பேர் அவசரமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்கள் Reviewed by Vanni Express News on 1/23/2019 11:53:00 AM Rating: 5