haiiii

போதைப்பொருளை முறியடிக்க பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்திற்கு சமமான யுத்தம்

-ஜனாதிபதி ஊடக பிரிவு

போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை அவமதிக்கின்றவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். 

எத்தகைய தோற்றத்தில் இருந்தபோதும் அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்திற்கு அடிமையானவர்களாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நேற்று (30) மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற “போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்துவதைப்போன்று பாடசாலை பிள்ளைகள் மற்றும் அரச அதிகாரிகளை இலக்காகக்கொண்ட விசேட நிகழ்ச்சித்திட்டங்களை எதிர்வரும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

எல்ரீரீஈ பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு சமமான யுத்தம் ஒன்றை போதைப்பொருள் சவாலை முறியடிப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்கும் தீர்மானத்தையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 

தேரவாத பௌத்த தத்துவத்திற்கு எதிராக இன்று பல்வேறு சக்திகள் செயற்படுவதாகவும் பௌத்த தத்துவத்தை திரிபுபடுத்தி காட்டுவதற்கு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள், கலாசார பெறுமானங்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளைபோன்று போதைப்பொருள் கடத்தலும் நாட்டை அழிவுக்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சூழ்ச்சியாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த விடயத்தில் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி தாய் நாட்டை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் நடைமுறைப்படுத்தப்படும் “போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக இடம்பெறும் மாவட்ட மீளாய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டம் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்றது. 

மாத்தறை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பிற்காக விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 650 கிராமிய நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டு பொதுமக்களுக்கு போதைப்பொருள் பற்றி அறிவூட்டப்பட்டும் வருகின்றது. 

மேலும் போதைப்பொருள் ஒழிப்பு செயலணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் மூலம் மாத்தறை மாவட்டத்திலுள்ள 05 வலயங்களை சேர்ந்த சுமார் 51 பாடசாலைகளின் மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இதற்கு பங்களிப்பு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வும் இம்மாநாட்டில் இடம்பெற்றன. மாத்தறை மாவட்ட பாடசாலை போதைப்பொருள் ஒழிப்பு பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ சின்னங்களை அணிவித்தல், நான்கு கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் மற்றும் 03 பாடசாலை போதைப்பொருள் ஒழிப்பு குழுக்களை பாராட்டி ஜனாதிபதியினால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

இதற்கு மேலதிகமாக இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து விடுவிப்பதற்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்புடன் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்கீழ் றுகுனு பல்கலைக்கழகத்தின் போதைப்பொருள் ஒழிப்பு ஆராய்ச்சி பிரிவின் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியினால் நிதி அன்பளிப்பும் வழங்கிவைக்கப்பட்டது. பேராசிரியர் சமன் சந்தன எதிரிவீர இதற்கான காசோலையை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார். 

மாத்தறை இசிப்பத்தனா ராமாதிபதி ராஜகீய பண்டித சங்கைக்குரிய தலாகம ஞானரத்தன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சந்ரசிறி கஜதீர, மாகாண அமைச்சர்களான சந்திமா ராசபுத்ர, மனோஜ் சிறிசேன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: போதைப்பொருளை முறியடிக்க பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்திற்கு சமமான யுத்தம்
போதைப்பொருளை முறியடிக்க பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்திற்கு சமமான யுத்தம்
https://4.bp.blogspot.com/-0S9v4XM98ks/XFLMhR8oGyI/AAAAAAABTK4/v4vkytL1pAUYrePSG3truBbUwRSfavNTACLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://4.bp.blogspot.com/-0S9v4XM98ks/XFLMhR8oGyI/AAAAAAABTK4/v4vkytL1pAUYrePSG3truBbUwRSfavNTACLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/01/president_31.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/01/president_31.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy