வீதியில் வாகன நெரிசல் விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்க திட்டம்

விமான அம்பியூலன்ஸ் சேவை ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

வீதியில் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் உயிரை பாதுகாப்பதற்காக இந்த சேவையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். 

நவீன வசதிகளுடன் கூடிய 152 அம்பியூலன்ஸ் வண்டிகளை சேவையில் இணைக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்ற போது உரையாற்றிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

நவீன வசதிகளுடன் கூடிய மேலும் 140 அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
வீதியில் வாகன நெரிசல் விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்க திட்டம் வீதியில் வாகன நெரிசல் விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்க திட்டம் Reviewed by Vanni Express News on 1/19/2019 05:05:00 PM Rating: 5