ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் - Photos

கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனு கலந்து கொண்டார்.

நிறுவனத்தின் ஸ்தாபகத்தலைவர் பிரௌஸ் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் ,மரைக்கார், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் கொலன்னாவ ஜும்மா பள்ளிவாசல் சம்மேளன தலைவர் ஹனீப் ஹாஜியார் உட்பட பலர் பங்கேற்றனர். 
ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் - Photos ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் - Photos Reviewed by Vanni Express News on 1/28/2019 05:12:00 PM Rating: 5