உயர்தரப் பரீட்சையில் சிங்கள மொழிமூலம் தேவி பாலிகா மாணவி சாதிக் அல்மா உயர்சித்தி

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

இம்முறை இம்பெற்ற கல்விப் பொதுத் தரா தர உயர்தரப் பரீட்சையில் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மொஹம்மது ஜௌபர் சாதிக் அல்மா, வர்த்தக பிரிவில் சிங்கள மொழிமூலமாகத் தோற்றி அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்று அகில இலங்கை ரீதியில் 85 ஆவது இடத்தையும் கொழும்பு மாவட்டத்தில் 38 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

இவர் மொஹம்மது ஜௌபர் சாதிக் - முஹம்மது முஸ்தபா மரைக்கார் ஐனுல் ஹம்சியா தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாவார். இவர் க.பொ.த. (சா/த) பரீட்சையில் 2015 இல் கொலன்னாவை பாலிகா வித்தியாலயத்தில் 9A பெற்று சிறந்த பெறுபேற்றின் அடிப்படையில் தேவி பாலிகாவிற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அகில இலங்கை ரீதியாகவும் மாகாண மட்டத்திலும் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தமிழ் மொழியிலும் ஆங்கில மெழியிலும் தமது திறமையினால் பல வெற்றி சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசலைக்கு புகழைத் தேடிக் கொடுத்தமைக்காக கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் மாணவி மொஹம்மது ஜௌபர் சாதிக் அல்மாவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
உயர்தரப் பரீட்சையில் சிங்கள மொழிமூலம் தேவி பாலிகா மாணவி சாதிக் அல்மா உயர்சித்தி உயர்தரப் பரீட்சையில் சிங்கள மொழிமூலம் தேவி பாலிகா மாணவி சாதிக் அல்மா உயர்சித்தி Reviewed by Vanni Express News on 1/09/2019 04:34:00 PM Rating: 5