சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான அணிவகுப்பு ஒத்திகை - சில பாதைகள் மூடப்படும்

தேசிய தின விழா (சுதந்திர தின விழா) நிகழ்வுகள் தொடர்பான இராணுவ அணிவகுப்பு ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றன. 

தேசிய தின விழா (சுதந்திர தின) எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. 

இதனால் காலி முகத்திடலின் கொள்ளுப்பிட்டியில் இருந்து லோட்டஸ் வீதி வரையான பாதை ஜனவரி 31, பெப்ரவரி 01 தொடக்கம் 03 மூடப்படும் என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01, 02, 03 ஆம் திகதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுவதன் காரணமாக, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் முதல் லோட்டஸ் வீதி வரையிலான பாதை மூடப்படும் எனவும், இது காலை 6.30 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை அமுலில் இருக்கும் என்று பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறினார். 
சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான அணிவகுப்பு ஒத்திகை - சில பாதைகள் மூடப்படும் சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான அணிவகுப்பு ஒத்திகை - சில பாதைகள் மூடப்படும் Reviewed by Vanni Express News on 1/28/2019 04:43:00 PM Rating: 5