ஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார - வர்த்தமானி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, அவரின் சொந்த மாகாணத்துக்குரிய ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிருப்திகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார - வர்த்தமானி அறிவிப்பு ஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார - வர்த்தமானி அறிவிப்பு Reviewed by Vanni Express News on 1/07/2019 11:54:00 PM Rating: 5