இளைய சகோதரனை கல்லால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன்

ஹபரதுவ, அங்குலகஹ பகுதியில் மூத்த சகோதரன் ஒருவன் தனது இளைய சகோதரனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். 

நேற்று (01) இரவு 10.30 மணியளவில் குறித்த நபர் அருகில் இருந்த கடைக்கு சென்று திரும்பி வரும் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

32 வயதுடைய பிரியந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

சொத்துப் பிரச்சினையின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். 

ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இளைய சகோதரனை கல்லால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன் இளைய சகோதரனை கல்லால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன் Reviewed by Vanni Express News on 1/02/2019 03:29:00 PM Rating: 5