மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக வருடத்திற்கு 80 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு

மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக வருடத்திற்கு 80 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பதாக, மது ஒழிப்பு ஜனாதிபதி பணிகுழு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் நோய்களினால் பாதிக்கப்படுவதாகவும், அதன் பிரதானி வைத்தியர் சமந்த குமார கிதலவ ஆரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தடுக்கும் நோக்குடன், ‘தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம்’ எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைள் தற்போது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாள்கள் மற்றும் தொழிலாளர்கள் தாம் நாளாந்தம் பெறும் அடிப்படை வேதனத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுபாவனைக்காக செலவிடுவதாகவும், வைத்தியர் சமந்த குமார கிதலவஆரச்சி தெரிவித்துள்ளார்.
மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக வருடத்திற்கு 80 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக வருடத்திற்கு 80 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு Reviewed by Vanni Express News on 1/13/2019 04:07:00 PM Rating: 5