தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குளத்தில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி

வவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (15) பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராட சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளித்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறிய போது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 18 இற்கும் 20 வயதிற்கும் உட்பட இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த ஒரு இளைஞனுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குளத்தில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குளத்தில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி Reviewed by Vanni Express News on 1/15/2019 05:24:00 PM Rating: 5