7 முஸ்லிம் மாணவர்களையும் விடுவிக்க நீதிபதி மறுப்பு

-Anzir 

பௌத்த தூபிக்கு மேல் நின்று, புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தென் கிழக்கு பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம் மாணவர்களையும் விடுவிக்க இன்று 29, செவ்வாய்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் 7 மாணவர்களையும் விடுவிக்க, நீதிபதி மறுப்புத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பிணையில் விடுவிக்க பொலிசார் இணங்கினர். எனினும் அதற்கு நீதிபதி மறுப்புத் தெரிவிததுள்ளார்.

இருந்தபோதும் முறைப்பாட்டை வாப வாபஸ்பெற. பொலிசார் அடியோடு மறுத்துள்ளனர். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள், இந்த வாதப்பிரதி வாதங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.

மாணவர்கள் சார்பிலும் வாதாடிய சட்டத்தரணிகளிடம், மாணவர்களை விடுவிப்பதற்கான ஏதுநிலைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி இதுதொடர்பில் மேற்கொண்டு ஆராய்ந்து பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
7 முஸ்லிம் மாணவர்களையும் விடுவிக்க நீதிபதி மறுப்பு 7 முஸ்லிம் மாணவர்களையும் விடுவிக்க நீதிபதி மறுப்பு Reviewed by Vanni Express News on 1/29/2019 04:42:00 PM Rating: 5