மாமியாரை கொலை செய்த மருமகன்

கம்பஹா, இஹலகொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணின் மகளுடைய கணவன் இந்தக் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இஹலகொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாமியாரை கொலை செய்த மருமகன் மாமியாரை கொலை செய்த மருமகன் Reviewed by Vanni Express News on 1/04/2019 04:16:00 PM Rating: 5