பிரதமர் முன்மொழிந்த யோசனைக்கு அமைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமை - அமைச்சர் சஜித்

அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதில் பிரச்சினைகள் இருப்பதாக வீடமைப்பு கலாசார மற்றும் கட்டுமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்த யோசனைக்கு அமைய அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். 

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமைகளை குடியிருப்பாளர்களுக்கு வழங்க முடியும். எனினும் அடுக்குமாடி தொகுதிகள் அமைந்துள்ள காணிகள் இன்னமும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் உள்ளதால், குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்க முடியவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். 

இந்தப் பிரச்சினை 1994ம் ஆண்டு ஏற்பட்டதாகும். வீடமைப்பு அமைச்சின் பொறுப்பில் இருந்த நகர அபிவிருத்தி அதிகார சபை வேறொரு அமைச்சின் பொறுப்புபிற்குள் வந்தததால் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மந்திரி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்த யோசனைக்கு அமைய அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
பிரதமர் முன்மொழிந்த யோசனைக்கு அமைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமை - அமைச்சர் சஜித் பிரதமர் முன்மொழிந்த யோசனைக்கு அமைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமை - அமைச்சர் சஜித் Reviewed by Vanni Express News on 1/13/2019 02:43:00 PM Rating: 5