அபிவிருத்தி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக காங்கேசந்துறைக்கு செல்லும் பிரதமர் ரணில்

காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசந்துறை செல்ல உள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

காங்கேசந்துறை துறைமுகம் 2021 ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிடம் இருந்து சலுகை அடிப்படையில் கிடைத்த நான்கு கோடி 50 இலட்சம் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. 

அபிவிருத்தி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசந்துறை செல்ல உள்ளார். 

காங்கேசந்துறை துறைமுகம் தற்சமயம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புதிய வாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 
அபிவிருத்தி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக காங்கேசந்துறைக்கு செல்லும் பிரதமர் ரணில் அபிவிருத்தி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக காங்கேசந்துறைக்கு செல்லும் பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 1/29/2019 02:09:00 PM Rating: 5