மோட்டார் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது துப்பாக்கி பிரயோகம் இருவர் பலி

வத்தள, ஹேகித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

ஹேகித்த அய்யன் சபரிமலை கோவிலுக்கு அருகில் இன்று மாலை 3.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மோட்டார் வாகனத்தில் வந்த குழு ஒன்று இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த இரவரும் மோட்டார் வாகனம் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த போதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது துப்பாக்கி பிரயோகம் இருவர் பலி மோட்டார் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது துப்பாக்கி பிரயோகம் இருவர் பலி Reviewed by Vanni Express News on 1/13/2019 10:39:00 PM Rating: 5