போதைப்பொருள் தடுப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் மாணவர்களால் முன்னெடுப்பு

-பைஷல் இஸ்மாயில்

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் கல்வி அமைச்சும் இணைந்து இவ்வாரம்  தேசிய போதைப்பொருள் வாரமாக பாடசாலைகளில் பிரகடனப்படுத்தப்பட்டு இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் "போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பிள்ளைகளிடம் கற்றுக்கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் மாணவர்களால் (22) முன்னெடுக்கப்பட்டது. 

மேற்படி ஊர்வலம் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மாளிகைக்காடு பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் அதிபர், ஆசிரியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், இலங்கை இராணுப் படை வீரர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் தடுப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் மாணவர்களால் முன்னெடுப்பு போதைப்பொருள் தடுப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் மாணவர்களால் முன்னெடுப்பு Reviewed by Vanni Express News on 1/23/2019 12:14:00 PM Rating: 5