கொழும்பில் இருந்து யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்த உத்தரதேவி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ´உத்தரதேவி´ என்ற பெயருடன் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது. 

கொழும்பில் இருந்து இன்று (14) காலை 7.15 மணி அளவில் தனது இரண்டாவது பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.30 மணி அளவில் யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது. 

இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர். 
கொழும்பில் இருந்து யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்த உத்தரதேவி கொழும்பில் இருந்து யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்த உத்தரதேவி Reviewed by Vanni Express News on 1/14/2019 10:42:00 PM Rating: 5