உத்தரதேவி புகையிரத சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது - மாநகர முதல்வரும் நிகழ்வில் பங்கேற்பு

-முதல்வரின் ஊடகப்பிரிவு

இந்திய அரசாhங்கத்தினால் இலங்கைக்கு வழங்கிவைக்கப்பட்ட புதிய S13 உத்தரதேவி புகையிரதம் நேற்று (27) பயணிகளுக்கான சேவையை கொழும்பிலிருந்து யாழிற்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. 

இப் புகையிரத சேவையை கொழும்பிலிருந்து ஆரம்பித்ததுடன் புகையிரதத்தில் யாழ் வருகை தந்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இந்தியத்துணைத் தூதுவர் தரஞ்சித் சிங் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு யாழ் புகையிரத நிலையத்தில் நேற்று இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் பங்கேற்றிருந்தார். 

மேலும் இவ் வரவேற்பு நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சோ. சேனாதிராசா அவர்களும், வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சுரேன் ராகவன் அவர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்கள், யாழ் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்கள், யாழ் புகையிரத நிலைய அதிபர் டி.பிரதீபன், முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சஜந்தன் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகப்பை, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 
உத்தரதேவி புகையிரத சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது - மாநகர முதல்வரும் நிகழ்வில் பங்கேற்பு உத்தரதேவி புகையிரத சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது - மாநகர முதல்வரும் நிகழ்வில் பங்கேற்பு Reviewed by Vanni Express News on 1/28/2019 04:53:00 PM Rating: 5