வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் பக்கசார்பாக இயங்குகிறது குற்றம் சாற்றும் - டாக்டர் தஸ்லீம் - விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சப்ராஸ்

வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக டாக்டர் தஸ்லீம் அவர்கள் அண்மையில் ஊடகவியலாளர் சப்ராஸுடன் தொலைபேசியின் ஊடக தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் ஊடகம் குறிப்பிட்ட அரசியல்வாதியையோ அல்லது குறிப்பிட்ட கட்சி சார்ந்த செய்திகளையோ மாத்திரம்  அதிகம் வெளியிடுவதை மாற்றி பன்முகப்படுத்தப்பட்ட அரசியல், மற்றும் அனைத்து துறைகளிலும் செய்திகளை வெளியிடுவதுதான் மீடியாவின் உண்மையான தர்மம் என்ற தனது கருத்தை வலியுறுத்தினார்.

டாக்டர் தஸ்லீம் அவர்களுக்கு என்னால் பதில் வழங்கப்பட்டு இருந்தது மின்னஞ்சல் ஊடாக வருகின்ற செய்திகளை உடனடியாக எமது செய்திக்குழுவில் இருப்பவர்கள் இணையதளத்தில் வெளியட நடவடிக்கை எடுப்பார்கள் அது ஜனாதிபதியின் செய்தியாக இருந்தாலும் சரி அமைச்சர் ரிஷாட்டின் செய்தியாக இருந்தாலும் சரி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செய்தியாக இருந்தாலும் சரி யாருடைய செய்தியாக இருந்தாலும் சரி முக்கியமான நிபந்தனை இந்த செய்திகள் அவர் அவர் ஊடகப்பிரிவில் இருந்து வரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இன்று வரை இருக்கின்றோம். இருப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

டாக்டர் தஸ்லீம் அவர்களே உங்களிடம் செய்திகள் இருந்தால் நிச்சயமாக எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் டாக்டர் என்பதற்காக நான் இந்த விளக்கத்தை உங்களுக்கு தெளிவாக தந்தேன் பிழையாக எது சரி சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். பல சர்வதேச ஊடங்களுடன் போட்டி போட்டு பயணித்து கொண்டு இருக்கின்றோம் உங்களை போன்ற கல்விமான்கள் ஆதரவு தராவிட்டால் வேற யார் தருவது சற்று சிந்திங்கள்.

உங்களது ஊடகத்துறை வளர்ச்சிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறி தொலைபேசி அழைப்பை நிறைவு செய்தார் டாக்டர் தஸ்லீம் அவர்கள்.
வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் பக்கசார்பாக இயங்குகிறது குற்றம் சாற்றும் - டாக்டர் தஸ்லீம் - விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சப்ராஸ் வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் பக்கசார்பாக இயங்குகிறது குற்றம் சாற்றும் - டாக்டர் தஸ்லீம் - விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சப்ராஸ் Reviewed by Vanni Express News on 1/25/2019 12:54:00 AM Rating: 5