வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

நாளை இரவு தொடக்கம் நாட்டில் ஊடாக மற்றும் கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மன்னார் தொடக்கம் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலபிடிய வரையான கடலோரத்துக்கு அப்பால் மற்றும் ஹம்பாந்தொடை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடலோரத்துக்கு அப்பால் கடும் காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டல திணைக்களம் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நாளை தினம் சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை Reviewed by Vanni Express News on 1/14/2019 04:44:00 PM Rating: 5