நீதியான விசாரணைக்கு வழக்கு மார்ச் மாதம் 19 வரை ஒத்திவைப்பு

- க.கிஷாந்தன்

ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சென்ற மாதம் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதி ஒருவர் தொடர்பில் ட்டன் நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட முதலாவது வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு  தொடர்பான விசாரணைக்கு எடுத்து கொண்ட ஹட்டன் நீதிமன்ற நீதவான், வழக்கு தொடர்பில் நீதியான விசாரணையை முன்னெடுக்க  விசாரணைகளை முறையாக மேற்கொண்டு சரியான சாட்சி பதிவுகளுடன்  நீதிமன்றத்தில்  எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முன்னிலைப்படுத்த வேண்டும் என ஹட்டன் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இச்சம்பவத்தில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்த  தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரே  மரணம் எய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதியான விசாரணைக்கு வழக்கு மார்ச் மாதம் 19 வரை ஒத்திவைப்பு நீதியான விசாரணைக்கு வழக்கு மார்ச் மாதம் 19 வரை ஒத்திவைப்பு Reviewed by Vanni Express News on 2/12/2019 05:51:00 PM Rating: 5