71வது சுதந்திர தின விழா நிகழ்வு விருதோடையில் இடம்பெற்றது

- Report - ACMC akkaraipattu

நேற்றைய தினம் எமது இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தின விழா நிகழ்வு விருதோடை சேனைக்குடியிருப்பு முற்சந்தியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருதோடை வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும் விருதோடை வட்டார மக்கள் பிரதிநிதியுமான சகோதரர் #ஆஷிக் அவர்கள் பிரதம அதிதீயாக பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

அதனை அடுத்து இந்நிகழ்வினை விருதோடை சேனைக்குடியிருப்பு ADF சங்க இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர்களோடு விருதோடை இஸ்லாமிய சங்க உறுப்பினர்களும் கலந்து பங்கேற்றனர் இந்நிகழ்வு எமது இலங்கை நாட்டின் சுதந்திர தினம் இதில் ஜாதி மத வேறுபாடின்றி இது எமது நாடு என்று முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையில் ஏனைய பகுதிகளில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
71வது சுதந்திர தின விழா நிகழ்வு விருதோடையில் இடம்பெற்றது 71வது சுதந்திர தின விழா நிகழ்வு விருதோடையில் இடம்பெற்றது Reviewed by Vanni Express News on 2/05/2019 04:02:00 PM Rating: 5