வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் புரண்ட முச்சக்கர வண்டி - ஒருவர் பலி - மூவர் காயம்

ஹங்வெல்ல, களுஅக்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

முச்சக்கர வண்டி ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் புரண்டு அருகில் இருந்த கம்பம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர் கொஸ்கம் வைத்தியசாலைக்கு எடுத்துச செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

பிரண்டிகம்பள பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த மூவரும் அவிஸ்ஸாவெல்ல வைத்தியகசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் புரண்ட முச்சக்கர வண்டி - ஒருவர் பலி - மூவர் காயம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் புரண்ட முச்சக்கர வண்டி - ஒருவர் பலி - மூவர் காயம் Reviewed by Vanni Express News on 2/13/2019 11:22:00 PM Rating: 5