கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

பொல்கஹவெல, யாங்கல்மோதர பகுதியில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு 7 பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம் பொல்கஹவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 2/25/2019 01:42:00 PM Rating: 5