பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் - ஒருவர் விளக்கமறியலில் - 7 பேர் பிணையில் விடுதலை

பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 7 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரை மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிணையில் விடுதலை செய்யப்பட்ட 7 பேரிற்குள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட ஏழு பேர் இரண்டு 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் - ஒருவர் விளக்கமறியலில் - 7 பேர் பிணையில் விடுதலை பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் - ஒருவர் விளக்கமறியலில் - 7 பேர் பிணையில் விடுதலை Reviewed by Vanni Express News on 2/25/2019 10:48:00 PM Rating: 5