ஓமானில் இடம்பெற்ற கோர விபத்து - இலங்கையை சேர்ந்த நால்வர் பலி

ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஓமானின் ம​லைப்பாங்கான அல் ஜபல் அல் அஹ்தார் என்ற பிரதேசத்தில் நேற்று முன்தினம் (23) மாலை இவ்விபத்து இடம்பெற்றது. 

உயர்ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் அவரது இரண்டு பெண் பிள்ளைகளும் மற்றுமொரு சிறுவனும் உயிரிழந்துள்ளனர். 

அக்கரைப்பற்று 01 அல்பாத்திமியா வீதியைச் சேர்ந்த முஹம்மது அபூபக்கர் காமிலா (40), அவரது மகள்களான நவால் (14), ஹபாப் (09) ஆகியோரும் உடன் சென்ற பொத்துவில் சிறுவன் பாதிக் (06) ஆகியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

விபத்தில் பிரபல கணக்காளர் சக்கியும் அவரது மகனான அமூத் ஆகியோர் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓமானில் இடம்பெற்ற கோர விபத்து - இலங்கையை சேர்ந்த நால்வர் பலி ஓமானில் இடம்பெற்ற கோர விபத்து - இலங்கையை சேர்ந்த நால்வர் பலி Reviewed by Vanni Express News on 2/25/2019 11:06:00 PM Rating: 5