புத்தளம் தில்லையடியில் கோர விபத்து - ஒருவர் பலி - இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில்

-எமது செய்தியாளர்

சற்றுமுன்னர் நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.

புத்தளம் தில்லையடி பகுதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிரே வந்த வாகனம் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
புத்தளம் தில்லையடியில் கோர விபத்து - ஒருவர் பலி - இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் புத்தளம் தில்லையடியில் கோர விபத்து - ஒருவர் பலி - இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் Reviewed by Vanni Express News on 2/08/2019 11:49:00 PM Rating: 5