ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. 

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர். 

இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 

மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8 ஆம் திகதி இரவு நடந்துள்ளது என குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி Reviewed by Vanni Express News on 2/11/2019 11:36:00 PM Rating: 5