எயார் லங்கா நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முதல்வர்

- முதல்வரின் ஊடகப்பிரிவு   

எயார் லங்கா (Airlanka) நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் பங்கேற்பு

எயார் லங்கா (Airlanka) நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (23) சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், விசேட உரை ஒன்றினையும் நிகழ்த்தினார். 

இந் நிகழ்வில் விருந்தினர்களில் ஒருவராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ.சேனாதிராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். 

மேலும் பேராசிரியர்கள், முன்னாள் துணை வேந்தர்கள், எயார் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள்,  சான்றிதழ் பெறுவோர் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எயார் லங்கா நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முதல்வர் எயார் லங்கா நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முதல்வர் Reviewed by Vanni Express News on 2/27/2019 04:39:00 PM Rating: 5