தலைமன்னாரில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

-லெம்பட்

தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 14 கிலோ 690 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட குறித்த குடும்பஸ்தர் விசாரனைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனது. 

தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
தலைமன்னாரில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது தலைமன்னாரில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது Reviewed by Vanni Express News on 2/01/2019 03:50:00 PM Rating: 5