வல்வெட்டித்துறை பகுதியில் 18கிலோ500 கிறாம் கஞ்சாவுடன் இருவர் கைது

-பாறுக் ஷிஹான்

வல்வெட்டித்துறை பகுதியில்   18கிலோ500 கிறாம் கஞ்சாவுடன் இருவர்  நேற்று (31) மாலை விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர் 

பருத்தித்துறை  கடற்படையினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் 38 வயதுடைய  வல்வெட்டித்துறை மற்றும் 27 வயதுடைய நாகர்கோயில் பகுதியை  சேர்ந்த  இருவருமே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர்  வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வல்வெட்டித்துறை பகுதியில் 18கிலோ500 கிறாம் கஞ்சாவுடன் இருவர் கைது வல்வெட்டித்துறை பகுதியில் 18கிலோ500 கிறாம் கஞ்சாவுடன் இருவர் கைது Reviewed by Vanni Express News on 2/01/2019 04:21:00 PM Rating: 5