பாடசாலை முன்னாள் வைத்து 16 வயது மாணவன் கஞ்சாவுடன் கைது

மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் பாடசாலை ஒன்றின் முன்னாள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஒரு மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். 

மாவட்ட புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த மாணவனை கைது செய்துள்ளனர். 

மாமாங்க பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் இந்த வருடம் டிசம்பர் மாதம் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரிடம் இருந்து கஞ்சாவை பெற்று பாடசாலையில் கல்வி கற்றுவரும் தனது நண்பர்களுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சுமார் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா பாவித்து வருவதாகவும், அவ்வாறே இன்றும் கஞ்சாவை பாடசாலைக்கு எடுத்து வந்துள்ளதாகவும், பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 
பாடசாலை முன்னாள் வைத்து 16 வயது மாணவன் கஞ்சாவுடன் கைது பாடசாலை முன்னாள் வைத்து 16 வயது மாணவன் கஞ்சாவுடன் கைது Reviewed by Vanni Express News on 2/12/2019 06:05:00 PM Rating: 5