ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட அதிபரை வசமாக சிக்க வைத்த பெற்றோர்

காலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

1 ஆம் ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு வாரங்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த போது அவருடைய பெயர் வரவிடாப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் 1 இலட்சம் ரூபா கொடுக்காவிடின் மாணவனை அனைத்து செல்லுமாறு குறித்த அதிபர் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து குறித்த பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். 

இன்று குறிப்பிட்ட இலஞ்சத் தொகையை அதிபர் அலுவலகத்தில் வழங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட அதிபரை வசமாக சிக்க வைத்த பெற்றோர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட அதிபரை வசமாக சிக்க வைத்த பெற்றோர் Reviewed by Vanni Express News on 2/13/2019 10:49:00 PM Rating: 5