மிஹிந்தலை தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு மாணவர்கள் இன்று பொலிசாரால் கைது

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பழமையான தூபி ஒன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்கள் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

18 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு இளைஞர்களும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மிஹிந்தலை தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு மாணவர்கள் இன்று பொலிசாரால் கைது மிஹிந்தலை தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு மாணவர்கள் இன்று பொலிசாரால் கைது Reviewed by Vanni Express News on 2/14/2019 05:01:00 PM Rating: 5