போலி கடன் அட்டையினை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த 03 பேர் கைது

நாட்டின் பல பிரதேச வர்த்தக நிலையங்களில் போலி கடன் அட்டையினை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த 03 பேர் தம்புள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 03 பேரும் காரில் பயணித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இதன்போது அவர்களிடமிருந்து வெவ்வேறு வங்கிகளின் 13 போலி கடன் அட்டைகள் மற்றும் 02 தேசிய அடையாள அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போலி கடன் அட்டையினை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த 03 பேர் கைது போலி கடன் அட்டையினை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த 03 பேர் கைது Reviewed by Vanni Express News on 2/27/2019 02:48:00 PM Rating: 5