டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபலங்களின் வீட்டில் போதைப்பொருள் - ஒருவர் கைது

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் அமல் பெரேராவின் மஹரகமவில் உள்ள வீடு இன்று (07) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது வீட்டில் இருந்து கொக்கேயின் பாவிப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஒன்றிணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன் அமல் பெரேராவின் சகோதரன் செஹான் பெரேரா கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தனது பொரலஸ்கமுவையில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் வேன் ரோயனின் தெஹிவளையில் வீடும் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது வீட்டில் இருந்து இலத்திரனியல் தராசு ஒன்றும் வீட்டில் இரகசிய துளை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ரயன் வேன் ரோயனின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமல் பெரேரா மற்றும் ரயன் வேன் ரோயன் ஆகியோர் அண்மையில் டுபாயில் பாதாள உலக தலைவனான மாகந்துர மதூஷ் உடன் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவர்களுடன் அமல் பெரேராவின் மகன் மற்றும் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபலங்களின் வீட்டில் போதைப்பொருள் - ஒருவர் கைது டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபலங்களின் வீட்டில் போதைப்பொருள் - ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 2/07/2019 11:39:00 PM Rating: 5