கள்ளக்காதலினால் பிறந்த இரட்டை குழந்தையை கொலை செய்த தாய் கைது

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் கூலி வீட்டில் இருந்த தாய் ஒருவர் தனக்கு பிறந்த இரட்டை குழந்தையயை பை ஒன்றில் போட்டுவிட்டு வைத்தியசாலையில் அனுமதியான பின்னர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். 

30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் அதிக இரத்து போக்கு காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார். 

பின்னர் பொலிஸார் இரத்த போக்கிற்கான காரணத்தை கேட்ட போது வீட்டில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ளார். 

கள்ள காதலினால் குறித்த குழந்தைகள் பிறந்ததாகவும் தனக்கு 5 வயதான மற்றுமொரு பிள்ளை இருப்பதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

பின்னர் பொலிஸார் வீட்டை பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் பை ஒன்றில் போடப்பட்டிருந்த இரு குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கள்ளக்காதலினால் பிறந்த இரட்டை குழந்தையை கொலை செய்த தாய் கைது கள்ளக்காதலினால் பிறந்த இரட்டை குழந்தையை கொலை செய்த தாய் கைது Reviewed by Vanni Express News on 2/05/2019 04:27:00 PM Rating: 5