01 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

1 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்திய நாட்டை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மும்பையில் இருந்து இலங்கை வந்த 34 வயதுடைய பிரஜையின் பயணப் பொதியில் இருந்து பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளார் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 01 கோடி 50 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
01 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது 01 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 2/08/2019 04:10:00 PM Rating: 5