தாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது

திருகோணமலை - தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ - தெவனிபியவர பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மொரவெவ  பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தாயை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் , மாணவி தாயுடன் வாழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , மாணவியின் தாயாருடன் பழகிவந்த நபரொருவர் , அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் நிலையில் , தாய் இல்லாத நேரத்தில் மாணவியை இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மொரவெவ காவற்துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த சந்தேக நபர் முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் எனவும் யானை தந்தங்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்று வருவதாகவும் மொரவெவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது தாய் இல்லாத நேரத்தில் 9 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது Reviewed by Vanni Express News on 2/13/2019 11:34:00 PM Rating: 5