பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் கைது

பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

டுபாய் மற்றும் இந்நாட்டு பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாகந்துர மதூஷ் டுபாயில் ஏற்பாடு செய்திருந்த விருந்தொன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவர் மற்றும் நடிகர் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்த தினுக மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பல்வேறு குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்சித எனும் மாகந்துர மதூஷ் பாதுகாப்பு பிரிவினர்களிடம் இருந்து தப்பித்து கடந்த காலங்களில் வெளிநாட்டில் இருந்துள்ளார். 

எவ்வாறாயினும் இவர் பல முறை நாட்டிற்குள் வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் கைது பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் கைது Reviewed by Vanni Express News on 2/05/2019 06:07:00 PM Rating: 5