ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே மாண‌வ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் சுயரூபத்தை காட்டிய ச‌ஜித் பிரேம‌தாச‌

-முஹம்மட் சப்ராஸ் - வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் 

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்ய எடுக்கப்படும் முயற்சிகள் படு தோல்வியடைந்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

எத்தனையோ கனவுகளுடன் பல போராட்டங்களின் பின் பட்டப்படிப்பு நிறைவடையும் கனத்தில் ஒரு வருடத்துக்கு முதல் செய்த ஒரு தவறுக்காய் 7 பொறியியலாளர்களை சிறையில் அடைப்பதால் என்னதான் பயனை அடைய போகிறீர்கள்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ச‌ஜித் பிரேம‌தாச‌ தெரிவித்துள்ள கருத்து முஸ்லிம் மக்கள் மத்தில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்க விடயங்களில் நான் தலையிடுவதில்லை எடுத்த எடுப்பில் முடிவெடுக்க முடியாது என்று அமைச்சர் ச‌ஜித் பிரேம‌தாச‌ தெரிவித்து இருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்க காத்திருக்கும் அமைச்சர் ச‌ஜித் பிரேம‌தாச‌வின் சுயரூபத்தை தற்போது முஸ்லிம் மக்கள் நன்றாகவே அறிந்துள்ளார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

நாட்டில் இன்னும் எவ்வளவோ பாரதூரமான குற்றச் செயல்கள் நாளாந்தம் சர்வ சாதாரணமாக நடைபெறும் போது தெரியாமல் செய்த ஒரு தவறுக்காக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சொல்லும் உங்கள் அரசியல் நாடகம் தெரியாத பாமரர்கள் இல்லை நாங்கள். இந்தவிடையத்தை வைத்து என்ன காய் நகர்த்த திட்டம் போட்டுள்ளீர்கள் என்று யாவரும் நன்கறிவோம்

இப்போதுதான் முஸ்லிம்கள் பிரதம் ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திரத்தை உணர்ந்துள்ளார்கள் அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை அமைச்சர் ச‌ஜிதுக்கு வழங்கவும் பிரதமர் பதவியை வழங்கவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்கள் ஏகா மனதாக சம்மதம் தெரிவித்தார்கள். அன்று வழங்கி இருந்தால் ?

நாட்டில் உள்ள சட்டம் அனைவருக்கும் சமன் என செல்லப்படுகிறது ஆனால் நடைமுறையில் இல்லை பெரும்பான்மையினர் செய்யும் குற்றங்களை கண்டும் காணாத சட்டம், முஸ்லீம்கள் செய்யும் தவறுகளுக்கு சட்டம் புஷ் என பாய்கிறது. இதுவா சனநாயகம் ?

இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறா வண்ணம் பிரகடனங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ்வாறான புனித தளங்கள் தொடர்பான முறையான அறிவுறுத்தள்களை பொதுமக்களுக்கு வழங்கி இந்த 7 மாணவர்களையும் கடுமையாக எச்சரித்து மண்ணிப்பு வழங்க சிபாரிசு செய்வதுதான் உங்களை போன்ற அரசியல் தலைமைகளிடம் சிறுபான்மை மக்களாகிய நாம் எதிர்பார்ப்பது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே மாண‌வ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் சுயரூபத்தை காட்டிய ச‌ஜித் பிரேம‌தாச‌ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே மாண‌வ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் சுயரூபத்தை காட்டிய ச‌ஜித் பிரேம‌தாச‌ Reviewed by Vanni Express News on 2/02/2019 12:13:00 AM Rating: 5