பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலையும் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும்

- றிம்சி ஜலீல்

தூபி மீது ஏறி படம்பிடித்த 7 மாணவர்களும் இன்று (05) முஸ்லிம் சட்டத்தரணிகளின் கடுமையான வாதத்தின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி இன்றைய சமூக வலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகவே உள்ளது இதில் நாம் பெற்றுக் கொண்ட படிப்பினைகளாக அடையாளப்படுத்தப் போவது என்ன என்கின்ற கேள்வி சமூகங்கள் மத்தியில் குறிப்பாக பேசப்படுகின்ற ஒன்றாகவே உள்ளது.

இலங்கை ஆங்கிலயர்களின் ஆட்சியில் இருந்த காலத்தில் இனவாதம் என்பது அவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு துனை போனது அதனால் அவர்களால் பல வருடங்கள் நமது நாட்டை கூறுபோட்டு நாட்டின் வளங்களை சுரண்டவும் நாட்டை கட்டி ஆட்ச்சி செய்யவும் முடிந்தது.

அவர்கள் இந்த நாட்டைவிட்டு சென்று இன்றைக்கு 71 வருடங்கள் கடந்துவிட்டது  ஆனாலும் நாம் இந்த நாட்டில் போலியான சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

71 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயன் பயன்படுத்திய உத்தி இன்றும் செயற்பாட்டில் உள்ளது அதுதான் இன மத மொழி வேறுபாடு இந்த நாட்டை ஆட்ச்சி செய்த அவர்கள் பின்பற்றிய மதம் கிரிஸ்தவமாக இருக்கலாம் ஆனால் அவர்களின் மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அவர்கள் விட்டுவிட்டு போன வழித்தோன்றல்களின் மொழி சிங்களம் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை இந்த நாட்டை ஆட்சி செய்தவன் இங்கே அவன் உருவாக்கியவர்களுக்கு இந்த நாட்டின் பெரும்பாண்மையின் மனதை ஆட்சி செய்யும் வித்தையையும் கற்றுக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

இந்த விடையத்தில் ஒரு உண்மையை நாம் கண்டுகொண்டோம் தமிழ் பேசும் நாம் மட்டுமே நான் இந்து எனது மொழி மட்டுமே தமிழ் என்றும் நீ முஸ்லிம் நீ பேசுவது கொச்சை தமிழ் என்று பேசுவதையும் இன்று நம்மால் கண்டுகொள்ள முடிகின்றது.

இதனால் என்னவோ நம்மால் இந்த நாட்டில் செய்யப்படும் சிறிய தவறுகள் கூட பெரிய பூதாகரமாக மாற்றப்படுகின்றது இதற்க்கு ஒரு நல்ல உதாரணம் அன்மையில் கைது செய்யப்பட்ட 7 பல்கலைகழக மாணவர்களின் சம்பவம் இவர்களின் விடுதலைக்காக போராடி கலைத்துப் போனவர்கள் நமது முஸ்லிம் சகோதரர்கள் மாத்திரமே.

தமிழன் தமிழனுக்கு குரல் கொடுக்கின்ற கலாச்சாரம் இன்று மாறிவிட்டது என்பதை ஒவ்வொறு முஸ்லீமும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று உருவாகிய சந்தர்ப்பமாகவே இதனை பார்க்க வேண்டும் வெல்லத்தில் அடிபட்டாலும் புயலில் தூக்கி எறியப்பட்டாலும் தமிழ் பேசும் மக்கள்  என்பதற்க்காக நாமது முஸ்லிம்கள் அவர்களுக்காக போய் நின்று உதவியதை மறந்துவிட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

பல்கலைகழக மாணவர்கள் விடையத்தில் சில அரசியல்வாதிகளின் நரித்தனமான முகங்களை சமூகம் கண்டுகொண்டது இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை வாக்குகளை சேகரிக்க வருகின்றவர்களுக்கு அடுத்த ஐந்து வருடங்களின் பின்னர்தானே வேலை கிடைக்கின்றது.

ஜனநாயகம் என்ற பெயரில் நீதிமன்றம் ஏறிய சட்ட முதுமாணி கௌரவ அமைச்சர் ரவூப் ஹகீம் போன்றவர்கள் இந்த மாணவர்கள் விவகாரத்தில் எதையுமே பேசாததும் இந்த சமூகம் ஆதரிக்கின்ற ஒரு மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் உறுவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற கட்சிக்கு அவப் பெயரை தேடித் தந்துள்ளது.

அத்தோடு பல்கலைகழக மாணவர்கள் 7 பேரும் இந்த தவறை செய்ய முன்னர் பலர் இப்படியான தவறுகளை செய்திருக்கின்றார்கள்  என்பதை சட்டம் தன் கடமையை செய்ய முன்னர் மறந்துவிட்டது இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்ததன் பின்னரே இவர்களை கைது செய்யும் அவசியம் இந்த நாட்டின் சட்டத்துக்கு ஏன் ஏற்ப்பட்டது என்பதுதான்?

சமூகமே ஒன்றை விளங்கிக்கொள் நாம் இந்த நாட்டில் சிறுபான்மையினர்தான் அதனால் நம்மீது இப்படியான தவறுகள் நடக்கும் போது நாம் இதன் மூலம் பல பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக் கொள்கின்றோம். 
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலையும் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலையும் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும் Reviewed by Vanni Express News on 2/05/2019 11:12:00 PM Rating: 5