கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலை

-சவூதியிலிருந்து கிண்ணியா ஐனுதீன்

இலங்கை திரு நாட்டில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனத்துவேசமான போக்கினால் முஸ்லிம் காங்கிரஸ் வரும் மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா அல்லது இணைந்து கேட்டால் அதிகமான ஆசனங்கள் பெற முடியுமா? என்பதை நாம் தற்கால நிலையினை வைத்து ஆய்ந்து பார்ப்போமானால் அது பெரும்பாலும் தனித்து கேட்பது சாத்தியப்படாது என்பதையே காட்டுகிறது.

அதாவது சென்ற 2009 ம் ஆண்டில் நடந்த மாகாண சபை தேர்தலுக்கும் தற்போது நடக்க உள்ள தேர்தலுக்கும் இடையில் அதிகமான மாற்றங்களை நாம் காணலாம். அன்றைய சூழலில் கிழக்கு மாகாணத்தில் ஐ தே கட்சி பலவீனமாக இருந்த நேரம் அது. இன்று ஐ தே கட்சி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு எம் பியும் கிழக்கில் பல உள்ளூர் ஆட்சி சபைகளையும் தான் ஆள்வது மட்டுமல்லாது தமிழ் முஸ்லிம்களிடம் தன் செல்வாக்கையும் வளர்க்கும் முகமாக அதிகமான அபிவிருத்தி பணிகளையும்  செய்து வருகிறது.

அதே போல் புலிகளினால் வஞ்சிக்கப்பட்டு சொத்து சுகங்களை இழந்து நிற்கும்  தங்களை மீட்டெடுக்க ஒரு தலைவர் வேண்டும் ஒரு கட்சி வேண்டும் என மக்கள் சிந்தித்த வேளை மட்டுமில்லாது என்ன செய்வது என விழி பிதுங்கிய நேரம் அன்று SLMC தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இன்று கட்சி தலைமை விட்ட பிழைகளினால் மக்கள் அதிகம் ஏமாற்றம் கண்டு கட்சியை விட்டு பழைய போராளிகள் விலகி போகின்றார்கள்.  இது திருகோணமலை மாவட்டம் உள்பட ஏனைய மாவட்டங்களிலும் அதிகமாக தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.

மறு புறம் பார்த்தல் ACMC ரிஷாத் அவர்கள்  கிண்ணியாவில் மட்டும் காலூன்றி ஹில்மி மஹ்ரூப் அவர்கள் கட்சியை வளர்க்கும் போது கிழக்கில் ஏனைய இரண்டு மாவட்டங்களில் கட்சி பெரிதாக வளராது இருந்த நேரம். இப்போது கிழக்கில் 40க்கு மேற்பட்ட உள்ளூர் ஆட்சி சபை உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு அமைச்சர் மட்டுமல்லாது அன்று SLMC இருந்த கல்முனை ஜெமில். கனிபா மதனி. மீராசாய்பு.  துல்கர் நசிம். என பெரிய பெரிய தலைவர்கள் இன்று SLMC பக்கம் இல்லை. இன்னும் கிழக்கில் ACMC அகோர வளர்ச்சி அடைந்து வரும் நிலை இன்று. இதுக்கு காரணம் SLMC தலைமையின் சாணக்கியமற்ற நகர்வாகும்.  சரியாக காய் நகர்த்தியிருந்தால் ACMC  கிழக்கில் இந்த வளர்ச்சி கண்டிருக்காது அல்லவா?

மேலும் 2009ம் ஆண்டு அமைச்சர் ஹக்கீம் அவர்கள் திருகோணமலையில் போட்டியிட்டார். மற்றும் பசிர் சேகுதாவுத், கசன் அலி, தெளபீக் எம் பி அவர்கள் என பெரிய பெரிய தலைகள் போட்டி இட்டனர் இன்று அமைச்சர் ஹரீஸ் மற்றும் தெளபீக் எம் பி அவர்களை தவிர மற்றவர்கள் SLMC விட்டு வெளியே போய் விட்டார்கள். அதே போல் சாய்ந்தமருது முற்றாக இல்லை.  இன்னும் ஹிஸ்புல்லா அவர்களின் ஆளுநர் நியமனம் அத்தாவுல்லா அவர்களின் வளர்ச்சி  என சொல்லிக்கொண்டே போகலாம் .

இன்னும் ஒரு படி மேலே நோக்கினால் கிழக்கு முஸ்லிம்கள் கருணா அம்மானின் இனத் துவேசமான போக்கினால் தினம் தினம் அரங்கேறும் சதிகளும் சச்சரவுகளும் முஸ்லிம் உரிமைக்கு எதிராக ஹர்த்தால்.  கூட்டணியின் அரசியல் திருத்த சட்டத்தை SLMC ஆதரிக்கிறது அதே போல் வடக்கு கிழக்கு இணைப்புக்கு SLMC துணை போகிறது என்று மக்கள் மனதில் தோன்றிய எண்ணமும் அண்மையில் கிரலாகல தூபியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பேர்கள் புகைப்படங்கள் எடுத்து சிறை சென்ற வழக்கில் காங்கிரஸ் மெளனம் சாதித்தமை. காணிப் பிரச்சினை வாழ்வாதாரம் மற்றும் தொழில் சம்பந்தமான எந்த பிரச்சினைகளும் தீர்வுகள் இல்லாது இழுத்தடிப்பதால் மக்கள் நம்பிக்கை இழந்து மாற்று வழிகள் தேடமுனைதுள்ளார். இது SLMC  பெரும்  இழப்பாக அமையப் போகுது.

ஆகவே நான் மேலே குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைய இன்றைய  கிழக்கு மக்களின் மன நிலையானது தங்கள் உரிமைகளை வென்றெடுக்க ஒரு மாற்று கட்சி அல்லது வேறு ஒரு தலைமையை நாட வைத்துள்ளது மட்டுமல்லாது   சில மக்களின் மனங்களில் கிழக்கை கிழக்காந்தான் ஆள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கும் அது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் எந்த சந்தர்ப்பத்திலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது அது ஏதாவது ஒரு தேசிய கட்சியில் தான் சவாரி செய்தாக வேண்டும். என்பதை மேலேயுள்ள தரவுகளின் அடிப்படையில் நாம் அறியலாம்.
  
நன்றி
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலை Reviewed by Vanni Express News on 2/06/2019 11:48:00 PM Rating: 5