தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

வீதிவிபத்துக்களில் பெருபாலானவை மோட்டார் சைக்கிள்களினாளே ஏற்படுகின்றன. இதன் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இவ்வாறான தலைகவசங்கள் காரணமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுகாக நடத்தப்பட்ட செயலமர்வில் அமைச்சர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது. 
தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க Reviewed by Vanni Express News on 2/13/2019 10:41:00 AM Rating: 5