நாவிதன்வெளி மண்ணில் இருந்து தாய்லாந்து சென்ற முதல் கண்டுபிடிப்பு சாதனையாளர்.

- எமது செய்தியாளர் A.C.M ஆசிர்

2019.01.02 சனிக்கிழமை தாய்லாந்து Bangkok சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபம், தாய்லாந்து.நடைபெறுகின்ற 2019 ஆண்டுக்கான சர்வதேச அறிவியல் புலமை ,கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சிக்கு யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களாகிய முகம்மட் காசிம் முகமட் அனீஸ் மற்றும் சோமசுந்தரம் வினோஜ் குமார் ஆகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி  போட்டியில் பங்குகொள்கிறார்கள்.

நாவிதன்வெளி 12ம் கொளனியை சேர்ந்த MCM.அனீஸ் தனது ஆரம்பக்கல்வியை கமு/சது அஸ்ஸிராஜ் பாடசாலையில் பயின்று உயர்கல்வியை கல்முனை ஷாஹிரா கல்லூரியில் தொடர்ந்தார். சிறு வயதிலேயே கண்டுபிடிப்புத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் பல தொழிநுட்ப உதிரிப்பாகங்களை பயன்டுத்தி வித்தியாசமான கண்டுபிடிப்பு படைப்புக்களை உருவாக்குவதில் தனது பொழுதுபோக்கை அமைத்துக்கொள்வார். 

அண்மையில் இவர்  கனரக வாகனங்களின் டயர்களை ரிம்மில் இருந்து  இலகுவாக உட்தள்ளி உடைக்கக்கூடியவாறான(manual) ஆக இயங்கும் Mechanical Tyre Helper இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து தேசிய ரீதியில் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். 
இதனால் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச கண்டுபிடிப்பு போட்டியிலும்  கண்காட்சியிலும்  பங்குபெறும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.

நாவிதன்வெளி பிரதேசத்திலிருந்து கண்டுபிப்பு துறையில் தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் சாதனையாளர்,சர்வதேச போட்டியிலும் கலந்து கொள்ளும் முதல் சாதனையாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் எம்.சீ.எம். அனீஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாவிதன்வெளி மண்ணில் இருந்து தாய்லாந்து சென்ற முதல் கண்டுபிடிப்பு சாதனையாளர். நாவிதன்வெளி மண்ணில் இருந்து தாய்லாந்து சென்ற முதல் கண்டுபிடிப்பு சாதனையாளர். Reviewed by Vanni Express News on 2/02/2019 10:53:00 PM Rating: 5