பசில் அதிரடி - டிசம்பர் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதி மாற்றம்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்பாரென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்றிற்கான முன்னிலையாவதற்கு முன்னதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள குடும்பங்களை வலுவூட்டும் நடவடிக்கை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தமது முன்னணியின் ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் நாடுமுழுவதுமுள்ள 36 ஆயிரம் கிராமங்களையும் உள்ளடக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பசில் அதிரடி - டிசம்பர் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதி மாற்றம் பசில் அதிரடி - டிசம்பர் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதி மாற்றம் Reviewed by Vanni Express News on 2/13/2019 11:43:00 PM Rating: 5