நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டுபாய் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறினார். 

பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரின் மகன் நதீமல் பெரேராவுக்காக பர் டுபாய் பொலிஸ் நிலையத்தில் விளக்கமளிக்கும் போது இது தொடர்பில் உறுதி செய்யப்பட்டதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன அத தெரணவிடம் கூறினார்.
நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை Reviewed by Vanni Express News on 2/12/2019 04:54:00 PM Rating: 5