சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அண்மையில் புல்வாமாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதலான சூழ் நிலையே காணப்படுகின்றது. இந்த மோதல் சம்பவம் காரணமாக பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான், மூன்று நாள்கள் தாமதத்துக்கு பின்னர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் சென்ற சவுதி இளவரசர் சல்மானை பாகிஸ்தான் நாட்டின் வழக்கமாக பின்பற்றப்படும் அரசு நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு, தனது காரில் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் இணைந்து பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

பின்னர் இதுகுறித்து டிவீட் செய்த இம்ரான் கான், சவுதியில் பணியாற்றும் 25 லட்சம் பாகிஸ்தானியர்களின் சார்பாக முன் வைத்த கோரிக்கையை சவுதி இளவரசர் ஏற்றுக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் மக்களின் மனங்களை சவுதி இளவரசர் வென்று விட்டார் என்றும் பதிவிட்டுள்ளார்.
சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர் சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர் Reviewed by Vanni Express News on 2/18/2019 11:25:00 PM Rating: 5