உடல் நலக்குறைவு காரணமாக நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்

தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். 

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்தது. 

அவர் தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

விஜயலட்சுமி சகோதரி இதுபற்றி கூறியதாவது:- ‘விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்´ இவ்வாறு அவர் கூறினார். 

2006-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஒரு உதவி இயக்குனர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதுதான் அவர் தற்கொலைக்கு முயல காரணமாக பேசப்பட்டது. அதே ஆண்டு விஜயலட்சுமி தனது தந்தையையும் இழந்தார். 

இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்த விஜயலட்சமி ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். அந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்து இருக்க வேண்டியது. ஆனால் திடீர் என்று ரத்தாகிவிட்டது. அதன் பின்னர் விஜயலட்சுமி வெளியில் வருவதையே குறைத்துக்கொண்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் உடல் நலக்குறைவு காரணமாக நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் Reviewed by Vanni Express News on 2/25/2019 04:56:00 PM Rating: 5